×

நெல்லில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை

 

மானாமதுரை, டிச. 16: பருவமழைக்கு பின் தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையால் நெல் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவைகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மானாமதுரை வேளாண் உதவி இயக்குனர் ரவிசங்கர் விடுத்துள்ள கூறியதாவது, தற்போதைய தட்ப வெப்ப நிைலயில் நெல் பயிரில் இலை சுருட்டு புழு, ஆணைக்கொம்பன் ஈ, மற்றும் புகையான் போன்ற பூச்சிகளும் மற்றும் குலைநோய், பாக்டீரியா இலை கருகல் நோய் போன்ற நோய்களின் தோக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுகிறது. அதிகமான நீரை தேக்கி வைப்பதால் புகையான் நோய் தாக்குதல் மற்றும் தூர் கட்டும் பருவத்தில் ஆளைக்கொம்பன் ஈ தாக்குதல் உண்டோகும். இதனை கட்டுப்படுத்த மண்பரிசோதனை முடிவுகளின் படி தேவையான அளவு தழைச்சத்து இடவேண்டும். மஞ்சள் வண்ண அட்டை ஓட்டும் பொறி ஏக்கருக்கு 12 வீதம் வைக்க வேண்டும். க்ளோராண்டிரிப்ரோனில் அல்லது தாயோமீதாக்சம் அல்லது ஏக்கருக்கு 30 மில்லி புளுபெண்டோமைடு அல்லது ஏக்கருக்கு 200 கிராம் கோர்டாப் ஹைட்ரோகுளோரைடு இடவேண்டும்.

தட்ப வெப்பம் குறையும் போது குலை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 120 கிராம் டிரைசைக்கிலசால் தெளித்து கட்டுப்படுத்தலாம். பாக்ட்டீரியா இலை கருகல் நோய் தற்போது பரவலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஸ்டிரப்டோமைசின் சல்பேட் மற்றும் 18 கிராம் என்ற அளவில் டெட்ராைசக்கிளின் கலவை மருந்துகளை தெளித்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்